அதிகம் மாசடைந்த நகரமாக திருப்பூர் திகழ்கிறது : எம்.எல்.ஏ. செம்மலை பேட்டி

திருப்பூர் : தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பில்லாத வகையில், திருப்பூரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தெரிவித்துள்ளார்.


திருப்பூர் : தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பில்லாத வகையில், திருப்பூரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் சுகாதாரம், கனிமவளம், குடிநீர் வாரியம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு உள்ளிட்ட நான்கு துறைகளில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு செம்மலை தலைமையில் திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையை ஆய்வு செய்த எம்.எல்.ஏ. செம்மலை, விரைவில் திருப்பூர் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி அமைக்க பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார். 

இதனையடுத்து, பல்லடம் சாலையில் அமைந்துள்ள சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, நிறுவன குழுவினர் சாய சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படும் முறைகளை கேட்டறிந்தனர். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் செம்மலை பேசியதாவது :- தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிக மாசுபாடு அடைந்துள்ள நகரங்கள் என நூறு நகரங்களை ஆய்வு செய்ததில், திருப்பூர் மோசமாக மாசடைந்து உள்ள நகராக சேர்ந்துள்ளது. எனவே, தொழில் வளர்ச்சியை பாதிக்காத அளவில், மாசுபாட்டினையும் குறைக்கும் முயற்சியாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான சலுகைகளும் வழங்கப்பட்டு மாசுபாட்டினை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, எனத் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...