கோவை : புதிய கல்வி கொள்கை குறைகளை களைந்திட வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

3,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு தகுதி தேர்வை கைவிட வேண்டும், தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே கல்லூரிகளில் சேர முடியும் என்பதை கைவிட வேண்டும், தமிழகத்தில் இரு மொழி கொள்கையே நீடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கல்பனா, சசிகலா உள்ளிட்ட வட்டார தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கபடுவார்கள் எனவும், மத்திய மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். மேலும், மூன்று வயது முதல் 18 வயது வரை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது என்றும் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று எனவும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்பதில் தடை ஏற்படும் என தெரிவித்தனர். மாணவர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்க மொழி கல்வியை தேர்ந்து எடுக்க வேண்டும் எனவும், இது தவிர்த்து மும்மொழி கொள்கையை திணிக்க கூடாது, என அவர்கள் தெரிவித்தனர்.