கோவையில் மாமனார் வீட்டின் முன் அமர்ந்து மருமகள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

கோவை :காந்திபுரம் டாடாபாத் அருகில் மாமனார் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருமகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை : காந்திபுரம் டாடாபாத் அருகில் மாமனார் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருமகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த சாமிநாதனின் மகள் சுதா. இவருக்கும் டாடாபாத் பகுதியில் வசித்து வரும் தயாள் ராஜ்குமாருக்கும் கடந்த 2014-ம் திருமணம் நடைபெற்றது. 



ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதாவிற்கும், தயாள் ராஜ்குமாரின் பெற்றோருக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்தது. மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லாததால் கடந்த சில வருடங்களாகவே மாமனாரின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டும் சுதா, தனது கணவருக்கு ஆண்மை இல்லாததை காரணம் காட்டி, தன்னிடம் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என மாமானர் சின்னசாமி வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.



அதேபோல, மாமனார், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதுடன், வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இதையடுத்து, தகவலறிந்து வந்த காட்டூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சுதாவை அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மாமனார் வீட்டின் முன் மருமகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...