கோவை : விநாயகர் சதுரத்தியை முன்னிட்டு கோவையில் ஆட்சியர் தலைமையில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், காவல்துறையினர், மாவட்ட அதிகாரிகள் பங்கேற்ற அமைதி குழு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியின் அழைப்பின் பெயரில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமையில், காவல்துறை இணை ஆணையாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில், கோவை மாவட்ட அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் ஜமாத்கள், முஸ்லிம் இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து அமைதி குழு கூட்டம் நடைபெற்றது. வரக்கூடிய விநாயகர் சதுர்த்தி தினத்தில் மற்றும் விநாயகர் சிலை கரைக்கும் நாட்களில் கோவை மாவட்டத்தில் அமைதி ஏற்படுவும் நிகழ்வு சிறப்பாக நடைபெறவும் ஆலோசனைகள் கேட்டு, அதன்படி செயல்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தவறுகள் இந்த ஆண்டு நடக்காது எனவும், சிறப்பாகவும், அமைதியாகவும் விழா நடைபெற அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழா சிறப்பாக நடைபெற வழங்கப்பட்ட ஆலோசனைகள் பின்வருமாறு :-
நீர்நிலைகள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டர் ஆப் பாரிஸ் இயற்கைக்கு எதிரான செயற்கை வண்ணங்கள் போன்றவை பயன்படுத்தப்படமாட்டாது. இதை காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கும். முடிந்தவரை போக்குவரத்து பாதிக்கப்படாமல் ஊர்வலங்கள் நடைபெறும்.
சிலை கரைப்பு நிகழ்வுகள் பகல் நேரத்தில் நடைபெற்று முடிந்து விடும். பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் யாராவது வசூல் கேட்டு வந்து தொந்தரவு கொடுத்தால், அதிக பணம் கேட்டால் உடனடியாக காவல்துறையிடம் அறிவிக்கவும். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

மது போதையில் குடிகாரர்கள் தகராறு செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். விழா தினத்தன்றும், அதற்கு முன்பும், பின்பும் டாஸ்மாக் மதுபான கடைகள் விடுமுறை விட அரசுக்கு அறிவுறுத்தப்படும். வெளியூர் ஆட்கள் வேறு பல பகுதிகளிலிருந்து இளைஞர்கள் வந்து தகராறு செய்யாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
விழா ஒரு ஆன்மீக விழாவாக இருக்கும். புதிய இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது. பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பிரஸ் & மீடியா மூலம் பதட்டம் ஏற்படாதவாறு, வதந்திகள் பரவாதவாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்படும்.
பிரச்சினைக்குரிய இடங்கள், கடந்த முறை பிரச்சனை நடந்த இடங்கள் அதிகப்படியான காவலர்கள் மூலம் சிறப்பு கவனம் செய்யப்படும்.
ஊர்வலத்தில் வருபவர்கள் கெட்டவார்த்தை பேசாமலும், மற்ற மதங்களை இழிவுபடுத்தாமல் வன்முறையை தூண்டும் கோஷங்கள் எழுப்பாமல் வருவதற்கு சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
விழா தினத்தன்றும், ஊர்வலத்தின் போதும் யாரும் கடைகளை அடைக்க சொல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். கடைகளுக்கும், வியாபாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மேடைகளில் வெறுப்பு பேச்சுகளும், மற்ற மதங்களை இழிவுபடுத்தும் பேச்சுக்களும் நடைபெறாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
ஊர்வலம் வரும் வழியில் உள்ள பள்ளிவாசல்களுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் பாதுகாப்பு அளிக்கும். விழா நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவுகள் செய்யப்படவேண்டும்.
தவறான செய்திகளாலும், வதந்திகளாலும் கோவை நகரின் மத நல்லிணக்கம் பாதிக்கப்படுகின்றது. ஒற்றுமை குறைகின்றது. வியாபாரம் பாதிக்கப்படுகிறது.
வெளியூர்களில் இருந்து இந்தியாவின் பல பாகங்களில் இருந்து வரும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப் படுகின்றார்கள்.இதனால், கோவை நகரத்தின் வருமானம் பாதிக்கப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு வதந்திகள் பரப்பும் தவறான செய்திகளை பரப்பும் நபர்கள் மீதும் பத்திரிகை ஊடகம் போன்றவற்றின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கோவை நகரின் அமைதிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. அனைவரும் அன்புடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு கோவை மாவட்ட முஸ்லிம்கள், இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாத்துகள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட அனைத்து கோரிக்கைகளையும் மாவட்ட காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் சிறந்த முறையில் நடவடிக்கை எடுத்து ஆவண செய்வதாக கூறியுள்ளனர்.