கோவை : மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மீன்வடிவில் தேன் மெழுகை பயன்படுத்தி விநாயகர் சிலையை வடிவமைத்து தங்கநகை பட்டறை தொழிலாளி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி.ராஜா. இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவ்வப்போது பல்வேறு சிற்பங்களை வடிவமைத்து வருகிறார். 100 மி.கி. தங்க கோப்பை, ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் விதமாக தீக்குச்சி நுனியில் சிறிய நுண்ணிய காளை, மரம் நடும் விநாயகர், ஹெல்மெட் விநாயகர் என ஏராளமான சிற்பங்களை வடிவமைத்து உள்ளார்.

தற்போது மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி தேன் மெழுகு கொண்டு மீன் வடிவில் விநாயகர் சிலை செய்துள்ளார். இதேபோல், மற்றொரு சிற்பத்தில் மழை நீர் காக்கும் மகா கணபதி சிலையையும் செய்துள்ளார். மழைநீர் விநாயகர் சிலை மீது வடிந்து குடத்தில் சேகரிப்பது போல வடிவமைத்து உள்ளார்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இவ்விரு சிற்பங்களை செய்ததாகவும், இதனை செய்ய இரண்டு நாட்கள் ஆனதாக அவர் தெரிவித்தார்.தமிழக அரசு தற்போது அறிவித்து உள்ள மழை நீர் சவால்களை கருத்தில் கொண்டு, இதனை உருவாக்கியதாக அப்போது தெரிவித்தார்.