கோவை : ஆனைகட்டி அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை மர்மமான உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைகட்டியை அடுத்த கூட்டுப்புலிக்காடு பகுதியில் அரசு தோட்டக்கலை பண்ணை அருகே இந்த யானை உயிரிழந்து கிடப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். பின்னர், இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், விரைந்து வந்த வனத்துறையினர் யானை இறந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் பட்சத்தில், உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, அரசு தோட்டக்கலை பண்ணை அருகே குட்டியுடன் இந்த யானை சுற்றித் திரிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.