நீலகிரி : கோத்தகிரி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து வாகனங்கள், செல்போன் மற்றும் ரூ. 1.25 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

மலைகளின் இளவரசியான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தனியார் காட்டேஜ்கள் செதல்பட்டு வருகின்றன. அதில், ஒரு சில காட்டேஜ்களில் சூதாட்டம், விபச்சாரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், கோத்தகிரி கிரீன்வேலி பள்ளி அருகே உள்ள தனியார் காட்டேஜில் பணம் வைத்து, சீட்டு விளையாடிய காட்டேஜ் உரிமையாளர்கள் ராஜா (52) உள்பட 20 பேரை காவல்துறை ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 19 செல்போன்கள், ரூ. 1,25,371 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நீலகிரியில் செயல்பட்டு வரும் தனியார் காட்டேஜ்களை போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.