கோவையில் ஐந்து வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஐந்து வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.


கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஐந்து வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.



கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல் வெளியானதையடுத்து கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோவையில் 3 பேரிடம் சிறப்பு நுண்ணறிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அவர்களிடம் நடத்திய விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லாததையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு பணிகள் மெல்ல மெல்ல விலக்கி கொள்ளப்பட்டது.



இந்த நிலையில், இன்று காலை திடீரென தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட வின்சென்ட் சாலையில் இரண்டு வீடுகளிலும், உக்கடம் ஜி.எம். நகரில் இரண்டு வீடுகளிலும், பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், கோவையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...