கிணற்றில் மிதந்த மனைவியின் சடலத்தை பார்த்து தண்ணீரில் குதித்து கணவர் தற்கொலை: கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை : கோவையில் காணாமல் போன மனைவி பிணமாய் கிணற்றில் இருப்பதை கண்ட கணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவை மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவையில் காணாமல் போன மனைவி பிணமாய் கிணற்றில் இருப்பதை கண்ட கணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவை மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட இருகூர் தீபம் நகரில் கிருஷ்ணன் (75), சாரதா (70) என்ற வயது முதிர்ந்த தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஆனால், யார் உதவியும் இல்லாததால் இவர்கள் கம்பங்கூழ் விற்பனை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர்.

இப்படியிருக்க, கடந்த சில நாட்களாக கடன் பிரச்னை, பிள்ளைகள் சரிவர கவனிக்காதது, வறுமை என சோகத்தில் வாழ்ந்த இந்த வயது முதிர்ந்த தம்பதிகள் மன உளைச்சலில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 26ம் தேதி முதல் சாரதா காணாமல் போனதால் நேற்று சாரதாவின் கணவர் கிருஷ்ணன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



இப்படியிருக்க இன்று தீபம் நகரில் உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் உடல் பிணமாக இருப்பதாக வந்த தகவலையடுத்து, சந்தேகமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்றார். 



பின்னர் முதியவரான கிருஷ்ணன், சடலத்திலிருந்த புடவை தனது மனைவியுடையது என கண்டவுடன் மனமுடைந்து கிணற்றில் குதித்துள்ளார்.

அருகில் ஆட்கள் இருந்தும் திடீரென முதியவர் கிருஷ்ணன் விழுந்தது அருகிலிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் சிங்காநல்லூர் போலீசார் கிணற்றில் இருந்த சாரதா உடல் மற்றும் கிருஷ்ணனை மீட்டுள்ளனர். கிணற்றில் உள்ள தண்ணீரில் விழாமல் பாறையில், தலையில் அடிபட்டு விழுந்ததில் கிருஷ்ணன் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

சாரதாவும் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 



இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆத்மா அறக்கட்டளை அம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...