பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு : துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை : பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை கண்டித்து கோவையில் அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை கண்டித்து கோவையில் அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை மயிலாப்பூர் அருகே தனியார் மருத்துவ அமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பங்கேற்றார்.அதில், அவர் பேசியதாவது :- ஆண்களை விட பெண்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக அளவில் பங்கு வகிக்கின்றனர்.ஆங்கிலமும் நகர வாழ்கையும் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை சீரழித்து விட்டது. பெண்கள் முன்பு போல் இல்லாததால் சமூக மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் 30% பெண்களே பெண்மையுடன் இருக்கின்றனர், எனத் தெரிவித்தார்.

குருமூர்த்தியின் இந்த சர்ச்சை கருத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது இருந்தது. இந்த நிலையில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பெண்கள் குறித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, புலியகுளம் பெரியார் சிலை அருகில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘யாகராவயினும் நாகாக்க பெண்கள் குறித்து இழிவாக பேசுவதை நிறுத்தி கொள், பெண்களை அவதூறாக பேசாதே’ என கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு நகர தலைவர் வனஜா நடராஜன், செயலாளர் சுதா ராமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...