மதுக்கரையில் புதிய நீதிமன்றத்தை திறந்து வைத்தார் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல்

கோவை : மதுக்கரை வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றத்தை இன்று திறந்து வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல், இந்த பகுதிக்கு உட்பட்ட வழக்குகள் அனைத்தும் இனி இங்கு நடைபெறும் என தெரிவித்தார்.

கோவை : மதுக்கரை வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றத்தை இன்று திறந்து வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல், இந்த பகுதிக்கு உட்பட்ட வழக்குகள் அனைத்தும் இனி இங்கு நடைபெறும் என தெரிவித்தார்.



கோவை மாவட்டம் மதுக்கரையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தாலுகா நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நீதிமன்ற திறப்பு விழாவில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி மற்றும் கோவை நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர். நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் நீதிபதிகளும், அமைச்சரும் நீதிமன்றத்தை பார்வையிட்டனர்.

பின்னர், மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் பேட்டியளித்ததாவது :- 2012-ல் தாலுகா அளவில் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டதாகவும்,அதன் அடிப்படையில் மதுக்கரையில் மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த வட்டத்தில் உள்ள சிவில், கிரிமினல் வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு மாற்றப்படும், எனக் கூறினார்.



இதனைதொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது :- மாநிலத்தில் மொத்தம் 1,140 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. நடப்பு பட்ஜெட்டில் நீதித்துறைக்காக 1,265 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. நீதிமன்றங்களுக்கான புதிய கட்டிடம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. பணியின் போது உயிரிழக்கும் வழக்கறிஞர்களின் சேமநல நிதியும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அனைத்து வட்டங்கள் தோறும் நீதிமன்றம் அமைக்கப்படும், எனக் கூறினார்.

மேலும், கோவை மாவட்டத்தில் இருந்து பிரிந்து பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பிருக்கின்றதா..? என்ற கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்கவில்லை.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...