கோவை : கருமத்தம்பட்டி அருகே குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனின் மனைவி மோகனப்பிரியா (38). இந்த தம்பதியினர் அன்னூர் சாலையில் ஹாளாப்ளாக் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இதில், மோகனப்பிரியா தினமும் பணிக்கு செல்வதற்கு முன் தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு பின்னர் வீடு திரும்பி கிளம்புவது வழக்கம். இந்த நிலையில், இன்று மோகனப்பிரியா தனது குழந்தைகளைப் பள்ளியில் விட்டு விட்டு வழக்கம் போல வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கருமத்தம்பட்டி-அவினாசி சர்வீஸ் சாலையில் மோகனப் பிரியாவிற்கு முன்னால் சென்று கொண்டிருந்த TN 69 F 9827 என்ற எண் கொண்ட கண்டெய்னர் லாரி திடீரென இடது பக்கம் திரும்பியது. அப்போது, இருசக்கர வாகனத்தில் லாரி பின்பாக சென்று கொண்டிருந்த மோகனப்பிரியா நிலைதடுமாறி லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, தகவலறிந்து வந்த ஊர்மக்களும், உறவினர்களும் மோகன பிரியாவின் உடலை பார்த்து அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியது.

பின்னர், தகவலறிந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார் மோகன பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். இப்படியிருக்க பழுதான மேம்பாலத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கட்டுமானப் பொருட்களை அலட்சியமாக வைத்துச் சென்றது தான் இந்த விபத்திற்கு காரணம் என கருமத்தம்பட்டி பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த அநீதிக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் குமார் கூறும் போது :- கருமத்தம்பட்டி பாலம் மற்ற பாலங்களை விட மிகவும் குறுகலாக உள்ளது. இந்த பாலம் தற்போது அழுத்தம் தாங்காமல் விரிவடைந்து வருகிறது. இதையடுத்து, பாலத்தை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இரவு நேரத்தில் பாலத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பகலில் அப்படியே அந்த பகுதியில் கட்டுமானப் பொருட்களை விட்டுச் செல்கின்றனர்.

இந்த கட்டுமானப் பொருட்களின் இடையூறு இன்று நடந்த விபத்துக்கு ஒரு காரணமாகவும் அமைந்துவிட்டது. மேலும், கருமத்தம்பட்டி பால பகுதி 45 மீட்டர் மட்டுமே உள்ளது. அதேபோல, சுமார் 8 மீட்டர் தாண்டி இருக்கவேண்டிய சர்வீஸ் சாலை கருமத்தம்பட்டியில் சுமார் 6 மீட்டர் மட்டுமே உள்ளது. இந்த குறுகலான பகுதிகளால் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களுக்கும் வழிவகுக்கிறது.
அதேபோல, கருமத்தம்பட்டி பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. அதை முழுவதுமாய் சரிசெய்யாமல் தற்காலிகமாக கம்பிகளை சொருகி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இது எந்த அளவுக்கு பாதுகாப்பான விஷயம் என்பது கேள்விக்குறியாக உள்ளது, எனவும் தெரிவித்தார்.