கோவை : கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண்களுக்கெதிரான குடும்ப மற்றும் வன்கொடுமை சட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று துவங்கப்பட்டது.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண்களுக்கெதிரான குடும்ப மற்றும் வன்கொடுமை சட்ட சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் இதனை திறந்து வைத்தார். இதில், முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி குணசேகரன், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரவி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், துணை கமிஷனர்கள் பாலாஜி சரவணன், பெருமாள் மற்றும் அரசு வக்கீல்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதிதாக திறக்கப்பட்ட இந்த சிறப்பு நீதிமன்றத்தில் பெண்களுக்கு எதிராக செயல்படுதல், இழிவாக பேசுதல் மனதளவிலும் உடலளவிலும் உறுதிப்படுத்துதல், ஏமாற்றி திருமணம் செய்தல் உள்ளிட்ட வன்கொடுமை வழக்குகள் இன்று முதல் விசாரிக்கப்படும். இதுவரை இந்த வழக்குகள் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையல், தற்போது இந்த வழக்குகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பெண் வன்கொடுமை வழக்குகள் 800 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மாநகர பகுதியிலுள்ள 600 வழக்குகள் தற்போது இந்த நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.