கோவை : காவேரி கூக்குரல் இயக்கத்தின் வேளாண் காடுகள் திட்டம் மூலமாக வேளாண் உற்பத்தி திறன் கூடி, விவசாயிகளுக்கு வருமானம் மும்மடங்காக அதிகரிக்கும் என வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் காடுகள் துறைத் தலைவர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ஈஷா யோகா மையம் சார்பில் காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காவிரி வடிநில பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மரங்கள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வியக்கம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களும், முதல் கட்டமாக அடுத்த 4 ஆண்டுகளில் 73 கோடி மரங்களும் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் செல்லமுத்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் செல்லமுத்து பேசியதாவது :- கோடிக்கணக்கான மரங்கள் வளர்ப்பதால் இயற்கை, காவிரி நதி மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்க முடியும். இந்த முயற்சியில் அனைத்து விவசாயிகளும் பங்கெடுத்து மரங்களை வளர்க்க முன்வர வேண்டும். இதனால், மழை, மண் வளம், பொருளாதாரம் பாதுகாக்கப்படும், எனக் கூறினார்.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் காடுகள் துறை தலைவர் பார்த்திபன பேசியதாவது :- மண் வளம் மற்றும் நீர் வளம் பாதுகாப்பில் மரங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. மேலும், வேளாண் காடுகள் திட்டம் மூலமாக காவிரி படுகையில் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களும், கர்நாடகாவில் 9 மாவட்டங்களும் பயன்பெறும். பல பயன் வேளாண் காடுகள் உருவாக்கும் வகையிலும், மண் வகைக்கு ஏற்ப மரங்கள் வளர்க்கவும் திட்டமிட்டுள்ளோம். அனைத்து தரப்பு விவசாயிகளும் தமது நிலங்களில் மரங்கள் வளர்க்க முன்வர வேண்டும். இந்த மரங்கள் வளர்ப்பினால் வேளாண் உற்பத்தி திறன் கூடி விவசாயிகளுக்கு வருமானம் மும்மடங்கு அதிகரிக்கும். குறுகிய கால மரங்களான மலைவேம்பு, குமில், மகாகனி, நடுத்தர மரங்கள் டிம்பர் வகை மரங்களும், எண்ணெய் வித்துக்களும், நீண்ட கால மரங்களான தேக்கு, சந்தனம், செம்மரம் உள்ளிட்ட 25 வகையான மரங்களை நடுவதற்கு தேர்வு செய்துள்ளோம். மரங்கள் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் அளிக்கும். விவசாயத்திற்கு நடுவே ஊடு பயிராகவும் மரங்களை வளர்க்கலாம், என அப்போது அவர் தெரிவித்தார்.