திருப்பூர் : திருப்பூரில் குடிபோதையில் தகராறு செய்யும் கணவருக்கு பேதி மருந்து கொடுத்ததால் ஆத்திரமடைந்த கணவர் தன் மனைவிகளை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் ஏ.பி.டி. சாலை பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருக்கு சாந்தி, திலகவதி ஆகிய இரு மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவர்கள் திருப்பூர் கல்லூரி சாலை மரக்கடை பகுதியின் சொந்தமாக கோழிக்கறி கடை நடத்தி வருகின்றனர். ரமேஷ் தினந்தோறும் குடிபோதையில் சாந்தி மற்றும் திலகவதி ஆகியோரிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதன் காரணமாக, சாந்தி மற்றும் திலகவதி இருவரும் நேற்று கணவர் ரமேஷுக்கு உண்ணும் உணவில் பேதி மருந்து கலந்து கொடுத்து உள்ளனர். இதை அறிந்து ஆத்திரமடைந்த ரமேஷ், தனது இரு மனைவிகள் இடமும் சண்டையிட்டு உள்ளார். சண்டை முற்றிப்போன நிலையில், ரமேஷ் தனது மனைவிகளை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், முதல் மனைவி சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டாவது மனைவி திலகவதி மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து, ரமேஷ் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் சென்று தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆபத்தான நிலையில் இருந்த ரமேஷின் இரண்டாவது மனைவி திலகவதியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, முதல் மனைவி சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சரணடைந்த ரமேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையில் தினந்தோறும் தொந்தரவு செய்த கணவருக்கு பேதி மாத்திரை கொடுத்த மனைவிகளை கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.