கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளின் விற்பனையை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகள் தயாரித்து வைத்துள்ளனர். இச்சிலைகள் விநாயகர் சதூர்த்திக்கு விற்பனைக்கு வரக்கூடும். இது நீர்நிலைகளை மாசுபடுத்துவதுடன், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற ஆணைகளுக்கு எதிராகவும் உள்ளது. எனவே, இச்சிலைகள் விற்பனைக்கு வருமுன் பறிமுதல் செய்ய சம்மந்தப்பட்ட துறைகளுக்கு ஆணையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.