கோவை கொடிசியாவில் வரும் 21-ம் தேதி முதல் ஜவுளி கண்காட்சி தொடக்கம்

கோவை : அனைத்து இந்திய நேசவாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கோவை கொடிசியாவில் வரும் 21-ம் தேதி ஜவுளி கண்காட்சி தொடங்குகிறது.

கோவை : அனைத்து இந்திய நேசவாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கோவை கொடிசியாவில் வரும் 21-ம் தேதி ஜவுளி கண்காட்சி தொடங்குகிறது.

இதுகுறித்து அகில இந்திய நெசவாளர் முன்னேற்ற சங்கம் தலைவர் கே.எல்.டி குப்புசாமி பொது செயலாளர் ஜெகநாதன் கூறியதாவது :- தமிழகம் முழுவதும் உள்ள நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நெசவுத்தொழில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், கண்காட்சிகளை நடத்த திட்டமிட்டு வரும் செப்டம்பர் 21-ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் ஜவுளி கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், 160 ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. இந்தியாவின் முன்னணி ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளி விற்பனையாளர்கள் இந்த கண்காட்சியில், பெண்களுக்கு தேவையான அனைத்து பட்டு மற்றும் கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், கோரா காட்டன், சில்க் காட்டன், லீ லினன் சேலைகள், குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

நெசவு பொருள்கள், நூல் நூல்கள், லினன் வகைகள், யான் வகைகள் என ஒட்டுமொத்த ஜவுளி பொருட்கள், ஜவுளி உற்பத்தி இயந்திரங்களும் இடம்பெறுகிறது ஜவுளித் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கண்காட்சியில் சேலம், ஈரோடு, மதுரை, கோவை நெல்லை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி தொழில் சார்ந்தவர்கள் ஸ்டால்கள் அமைக்கின்றனர். துவக்க விழா நிகழ்ச்சியில் குலகுரு தயானந்த பூரி மகாராஷ் சுவாமிகள் தலைமை தாங்க உள்ளார். மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி ராணி, நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ் மணியன், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜவுளித் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கண்காட்சியில் நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு விதமான தறிகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...