கோவை : சொத்து வரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டதைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும், வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீத சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சூயஸ் நிறுவனத்திற்கு 26 ஆண்டுகளுக்கு குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டது உள்ளிட்டவற்றை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சொத்து வரி உயர்வு மற்றும் சூயஸ் குடிநீர் திட்டத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். எந்த அரசும் செய்யாத வகையில் நூறு சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், சட்டமன்றத்தில் உறுதியளித்தபடி சொத்து வரி உயர்வை தமிழக அரசு குறைக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும், சொத்து வரி உயர்வு பொதுமக்களுக்கு சுமையாக அமையுமெனவும், சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை வழங்கியிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், சொத்து வரி உயர்வு மற்றும் சூயஸ் குடிநீர் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.