விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு : திருப்பூரில் குறைதீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்

திருப்பூர் : விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

திருப்பூர் : விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. வழக்கமாக விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 100 முதல் 150 வரையிலான விவசாயிகள் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்பர். ஆனால், கடந்த சில வாரங்களாக திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்பை மீறி விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் சூழ்நிலையில், அதனை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். 



இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று எந்தவித நடவடிக்கை எடுக்காத காரணத்தால், கடந்த வாரம் போராட்டத்தின்போது விவசாயிகளை கைது செய்ய முயன்றனர். அப்போது, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் புறக்கணித்தனர். மேலும், பல்லடம் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் மீது அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து, இன்று மதியம் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...