காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதா உச்சநீதிமன்றத்தில் செல்லாது : முன்னாள் எம்.எல்.ஏ. பழ கருப்பையா பேட்டி

திருப்பூர் : அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் மத்திய அரசு நிறைவேற்றிய காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதா உச்சநீதிமன்றத்தில் செல்லாது என திருப்பூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் மத்திய அரசு நிறைவேற்றிய காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதா உச்சநீதிமன்றத்தில் செல்லாது என திருப்பூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா தெரிவித்துள்ளார். 



திருப்பூர் மாவட்ட ஐக்கிய சுன்னத் ஜமாஅத் மற்றும் திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 'வரலாற்றில் வாழ்பவர்கள்' எனும் புத்தக வெளியீட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான பழ கருப்பையா புத்தகத்தை வெளியிட்டார்.



பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- சுதந்திர போராட்டத்திற்காக இஸ்லாமியர்களும் இணைந்து இந்த நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தனர். மதம் காரணமாக தற்போது வேற்றுமைகளை வளர்ப்பதும், அவர்கள் வாழ்க்கை முறையில் குறிப்பிடுவதும், வீணான பகையை வளர்க்கும். காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் நுழைந்தது தேவையில்லாதது. 70 ஆண்டு காலம் இந்தியாவுக்கு விஸ்வாசமாக இருந்த மக்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்து விட்டது. காஷ்மீர் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானோடு சேராமல் இந்தியாவுடன் இணைந்தது பெருந்தன்மையானது. ஆனால், அதனை தவறு என அம்மக்கள் கருதக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. 



370 பிரிவு என்பது இந்தியாவின் எல்லையோர மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கை மற்ற மாநிலங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும். இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா முறைப்படி காஷ்மீர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு இருக்க வேண்டும். அது செய்யாத பட்சத்தில், இந்த மசோதா உச்சநீதிமன்றத்தில் தோல்வி அடையும். மேலும், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் கொடுமையானது, என பழ கருப்பையா தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...