நீலகிரி : குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையினை கார்பரேட் நிறுவனமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கடந்த 5 நாட்கள் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் சார்பில் அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை உட்பட அகில இந்திய அளவில் உள்ள 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனைக் கண்டித்து தொழிற்சங்க சம்மேளனங்கள் அகில இந்திய அளவில் ஒரு மாத வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. அதன்படி, கடந்த 20-ம் தேதி முதல் ஒருமாத வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 2 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறை செயலாளருடன் தொழிற்சங்க சம்மேளன நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில், வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இன்று முதல் பணிக்கு திரும்பினர். இதையடுத்து, தி.மு.க., .காங்கிரஸ், விடுலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி. உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு தன்னுடைய முடிவை மாற்றாவிட்டால், மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.