கோவை : தீவிரவாத அச்சுறுத்தல் வெளியானதை அடுத்து, மேற்கு மண்டலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 172 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்துள்ளார்.
கோவை : தீவிரவாத அச்சுறுத்தல் வெளியானதை அடுத்து, மேற்கு மண்டலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 172 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்துள்ளார்.
கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலையடுத்து, கடந்த 23-ம் முதல் தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கோவை பந்தய சாலையிலுள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஐ.ஜி. பெரியய்யா தலைமையில் கோவை சரகம் மற்றும் சேலம் சரக டி.ஐ.ஜி.க்கள் காவல் கண்காணிப்பாளர்கள் என அனைவரும் இன்று சிறப்பு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
அதேபோல, தீவிரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து, வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு மண்டலம் முழுவதும் 172 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா தெரிவித்தார். மேற்கு மண்டலம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.