டெல்லியில் இன்று நடந்த ஜல் ஜீவன் மிஷன் என்ற புதிய திட்டத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று, தமிழக நீர் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினார்.

நாட்டின் 73-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ” நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல, ஜல் ஜீவன் மிஷனுக்கு, ரூ .3.5 டிரில்லியன் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் மத்திய அரசின் நீர் மேலாண்மை துறை அமைச்சகத்தால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை மாநிலங்களில் அமல்படுத்துவது குறித்து மத்திய நீர் மேலாண்மைத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஜெகாவாத் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.