மும்பை - பெங்களூரூ இண்டஸ்ட்ரியல் காரிடாரை கோவை வரை விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்தார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மனு ஒன்றை அளித்தார். அதில், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின்படி, தமிழகத்திற்கான ஆயிரத்து 196 கோடியே 27 லட்சம் ரூபாய் மானியத்தை விடுவிக்க வேண்டும். அதோடு, 3,780 கோடியே 81 லட்சம் ரூபாய் அடிப்படை மானியத்தையும் விடுவிக்க வேண்டும். மும்பை - பெங்களூரூ இண்டஸ்ட்ரியல் காரிடாரை கோவை வரை விரிவுபடுத்த வேண்டும். இதேபோல, கோவை - டெல்லி இடையே தினசரி விமான சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமராரை சந்தித்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின் ரூ. 415.98 கோடி செயலாக்க மானியம் மற்றும் ரூ. 2,061.87 கோடி அடிப்படை மானியத் தொகையினை விடுவிக்கக் கோரியும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக 2 லட்சம் வீடுகள் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்ட அனுமதி வழங்க அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோரிக்கை விடுத்தார்.