கோவை : வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பைக் கண்டித்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று இருபிரிவினரிடம் ஏற்பட்ட மோதலையடுத்து, பொலீரோ வாகனம் எரிக்கப்பட்டு, டாக்டர் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை தலைவர் யு.கே.சிவஞானம் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் தினேஷ், காயத்திரி, அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஷீலா ராஜ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் தலைவர் ஆனந்தன், கரீம், ஜோதிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, அம்பேத்கர் சிலை உடைப்பில் ஈடுபட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.