158 காலி பணியிடங்களுக்கான தேர்வில் மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியின் 152 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை

கோவை : தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 158 வனச்சரக அலுவலர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 152 தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.

கோவை : தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 158 வனச்சரக அலுவலர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 152 தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழக அரசின் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வனவியல், பட்டுப்புழுவியல் துறை ஆகிய படிப்புகளில் நான்கு ஆண்டுகள் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், வனவியல் படிப்பானது மூன்று ஆண்டுகள் முழுக்க முழுக்க வனம் சார்ந்த அனைத்தும் பயிற்றுவிக்கப்படுகிறது. பின்பு ஓராண்டிற்கு பல்வேறு களப்பயிற்சிகள் வனத்தினுள்ளே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வனப்பணிகளை கவனிக்க தேவையான அனைத்து பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 158 வனச்சரக அலுவர் பணியிடங்களுக்கான தேர்வு தமிழக அரசின் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்டது. இதில், மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் இருந்து ஆண்கள், பெண்கள் என பட்டம் முடித்த 250 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். அனைவருக்கும் பொதுவாக நடத்தப்பட்ட இந்த தேர்வில் 152 பேர் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் வனவியல் பயின்ற மாணவர்கள் தேர்வாகி சாதனைப் படைத்துள்ளனர். இதில், 102 ஆண்களும், 50 பெண்களும் அடங்குவர். 

இதுவரை இல்லாத அளவுக்கு கொடுக்கப்பட்ட 158 காலி பணியிடத்தில் 152 பேர் வனக்கல்லூரியில் இருந்து தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக வனக்கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வனத்தை பற்றி நான்கு ஆண்டுகள் கல்வி பயிலும் இந்த மாணவர்கள், வனத்தைப் பற்றி முழுவதும் தெரிந்துள்ளதுடன், அனைத்து கால சூழ்நிலைகளிலும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து கள பயிற்சியைப் பெற்றதால், துறையைப் பற்றி தெரிந்தவர்கள் இப்பணிக்கு செல்வது உகந்ததாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...