மதுபானக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பில்லிக்கம்பை மக்கள் தர்ணா

நீலகிரி : பில்லிக்கம்பை கிராம பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையை அகற்றக்கோரி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி : பில்லிக்கம்பை கிராம பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையை அகற்றக்கோரி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உதகை அருகே உள்ள பில்லிக்கம்பை கிராமப்பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடை அகற்றக்கோரி கடந்த மூன்று வாரமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். பின்னர், ஒரு வாரத்திற்குள் மதுபானக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் கூறிய நிலையிலும், மதுபானக் கடையை இன்னும் அகற்றாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 



மேலும், தங்கள் கிராமப் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும், தங்கள் கிராமப் பகுதியில் மதுபானம் அருந்திவிட்டு வரும் குடிமகன்கள் காலி பாட்டில்களை சாலைகளில் வீசுவதும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பெண்கள் மாலை நேரங்களில் வீடு திரும்பும் பொழுது கேலி செய்வது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதனால், பாதிப்படைந்த பில்லிக்கம்பை கிராம மக்கள் அப்பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையை அகற்ற தொடர்ந்து மூன்று முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடக் கோரி பொதுமக்களிடையே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின், போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் மதுபான கடையை அகற்றாவிட்டால் மீண்டும் தங்கள் கிராம பகுதியில் சாலை மறியலில் ஈடுபடுவதாக கூறி கலைந்து சென்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...