திருப்பூர் : வருடாந்திர ஊதிய உயர்வை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து, தங்களது கோரிக்கையை நோட்டீஸ் ஆக அச்சடித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

108 ஆம்புலன்ஸ் சேவையானது ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ. என்ற தனியார் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஓட்டுநர், டெக்னீசியன் உட்பட பல பணிகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வருடாந்திர ஊதிய உயர்வை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து, தங்களது கோரிக்கையை நோட்டீஸ் ஆக அச்சடித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

3 வருடங்களுக்கு முன்பு வரை அப்ரைசல் என்ற முறை இருந்ததை கண்டித்து, பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, அந்த முறை ஒழிக்கப்பட்டு வருடாந்திர ஊதிய உயர்வு கொண்டு வந்ததாகவும், இந்த வருடத்திற்கான ஊதிய உயர்வு தற்போது வரை வழங்கப்படவில்லை என்றும் அந்த நோட்டீஸில் கூறியுள்ளனர். போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்பாக, தாங்கள் செய்யும் வேலை பொதுமக்களுக்கு என்பதால், தங்களது கோரிக்கைகளை பொதுமக்களிடம் தெரியப்படுத்துவதாகவும் கூறி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயிலில் நின்று மக்களுக்கு கோரிக்கை அடங்கிய நோட்டீஸை பொதுமக்களிடம் விநியோகித்து வந்தனர்.