போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் அத்துமீறல் : காவல் அதிகாரி மீது திருப்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு

திருப்பூர் : உயர்மின் கோபுரத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

திருப்பூர் : உயர்மின் கோபுரத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்களில் அளவிடும் பணி கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, அப்பணியை நிறுத்தக் கோரியும், விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். குழந்தைகள், பெண்கள் என பார்க்காமல் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட அவர்களை சிறுநீர் கழிக்கக் கூட அனுமதிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர். 



இதனால், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

முன்னதாக, விவசாயிகள் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாது ஒரு சிலர் மட்டுமே உள்ளே சென்று மனு அளிக்கலாம் என காவல்துறையினர் விவசாயிகளிடம் தெரிவித்ததால், விவசாயிகள் அதனை ஏற்க மறுத்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் அனைத்து விவசாயிகளும் உள்ளே அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...