அம்பேத்கர் சிலையை உடைத்த சாதி வெறியர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்த கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டம் : 50 பேர் கைது

கோவை : வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையை உடைத்த சாதி வெறியர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்த கட்சியினர் ஊர்வலமாக வந்து ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை : வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையை உடைத்த சாதி வெறியர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்த கட்சியினர் ஊர்வலமாக வந்து ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர்  கைது செய்தனர்.



நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று இரு பிரிவினரிடம் ஏற்பட்ட மோதலை அடுத்து, போலீரோ வாகனம் எரிக்கப்பட்டு, டாக்டர் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழக அரசு சேலத்திலிருந்து அம்பேத்கரின் வெண்கல சிலை,வேதாரண்யத்திற்கு கொண்டு வரப்பட்டு , இன்று காலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. சிலையை உடைத்ததாக காவல் துறையினர் இதுவரைக்கும் 50 பேரை கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிலையை உடைத்த சாதி வெறியர்களை கைது செய்யக்கோரி, கோசங்களை எழுப்பியவாறு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



இதனையடுத்து, மண்டல செயலாளர் சுசி கலையரசன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது :- பெண்களுக்கு சம உரிமை வேண்டும், அனைவருக்கும் எட்டு மணி நேர வேலை, குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தவர் டாக்டர் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கி கொடுத்தவர். அனைத்து தலைவர்களுக்கும் சிலை இருக்கும் போது தமிழகத்தில் அம்பேத்கருக்கு சிலை இல்லை. மேலும், அம்பேத்கர் சிலையை உடைத்த சாதி வெறியர்களை வன்கொடுமை மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அம்பேத்கர் சிலை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும், என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...