கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை மறுபுறம் திருப்பிய பேருந்து ஓட்டுநர் : பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கோவை : அன்னூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியபோது, பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை : அன்னூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியபோது, பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கோவைக்கு TN 38 N 3034 என்ற எண் கொண்ட அரசு பேருந்தானது, புளியம்பட்டி வழியாக இன்று காலை அன்னூர் வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையம் பகுதியில் உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்துடன் ஒருவர் சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது, இருசக்கர வாகனம் பேருந்தின் மீது மோதுவது போல் வந்துள்ளது. இதையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர் செந்தில் இரு சக்கர வாகனத்தின் மீது மோத கூடாது என்று பேருந்தை மறுபுறம் திருப்பியுள்ளார்.



ஆனால், பேருந்து ஆனது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்ட நிலையில், படுகாயமடைந்தவர்கள் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கருப்பசாமியும், பேருந்தில் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தகவலறிந்து வந்த அன்னூர் போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...