வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டதால் கோவையில் பேருந்து கண்ணாடி உடைப்பு : தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி சரண்

கோவை : நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

கோவை : நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டிருந்த முன் விரோதம் காரணமாக அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்துறையினரின் கண்முன்னே இந்த நிகழ்வு நடந்ததை கண்டித்து நேற்று நாகை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இன்று தலித் அமைப்பினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.



இப்படி பதட்டமான சூழலில் உள்ள நிலையில் கோவையில் இரண்டு இடங்களில் இரண்டு பேருந்துகள் மீது அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் நின்ற ஊட்டிக்கு செல்ல கூடிய அரசு பேருந்து மீதும், கவுண்டம்பாளையம் அருகே மருதமலை செல்ல கூடிய 70 டி அரசு பேருந்து மீதும் இந்த கல் வீச்சு நடைபெற்றுள்ளது. இதில், அரசு பேருந்தின் பின் பக்க கண்ணாடி சேதம் அடைந்துள்ளது. பேருந்தை உடைத்த கல்லில், சுற்றி இருந்த பேப்பரில் "அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக கண்டனம் எனவும், இதற்கு காரணமான சாதி இந்து தீவிரவாதிகளை கைது செய்ய வேண்டும் எனவும், சிலைகளை உடைக்கலம் ஆனால், சித்தாந்தங்களை சிதைக்க முடியாது," எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இதனிடையே, கோவை சாய்பாபா காலனி பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த சம்பவம் தொடர்பாக தமிழ்புலிகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் கோவை ராவணன் சாய்பாபா காலனி காவல்நிலைத்தில் சரணடைந்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...