கோவை : கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 25-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை இவ்வமைப்பினரும் மற்றும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினரும் இணைந்து நடத்தினர். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில் 250-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

மேலும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு 150க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் தங்களின் சேவையை எளிய மக்களுக்காக ஆற்றி வருவதாக இவ்வமைப்பினர் தெரிவித்தனர்.