திருப்பூர் : விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகளை தரக்குறைவாகப் பேசிய போலீசாரை கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் பல்லடத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் 12 உயர்மின் கோபுரங்கள் திட்டங்களை விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயர்மின் கோபுரங்களுக்கு பதிலாக சாலையோரமாக கேபிள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் 13 மாவட்டங்களில் எட்டு இடங்களில் நடந்த தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வாவிபாளையம் கிராமத்தில் கடந்த 23ம் தேதி நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த அப்பகுதி விவசாயிகள் அளவீட்டு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த மதுவிலக்கு உதவி காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் குறித்து தவறாக பேசினார். இதனை கண்டிக்கும் விதமாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வாவிபாளையத்தில் இன்று கண்டன் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டு, விவசாயிகள் மீது விரோத போக்கை கடைபிடித்து வரும் தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
கூட்டத்தின் முடிவில் தரக்குறைவாக பேசிய காவல்துறையினர் மீது நடவடடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.