கோவை : நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இரண்டு அரசு பேருந்துகள் மீது கல்வீசிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டிருந்த முன் விரோதம் காரணமாக அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்துறையினரின் கண்முன்னே இந்த நிகழ்வு நடந்ததை கண்டித்து நேற்று நாகை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இன்று தலித் அமைப்பினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இப்படி பதட்டமான சூழலில் உள்ள நிலையில் கோவையில் இரண்டு இடங்களில் இரண்டு பேருந்துகள் மீது அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் நின்ற ஊட்டிக்கு செல்ல கூடிய அரசு பேருந்து மீதும், கவுண்டம்பாளையம் அருகே மருதமலை செல்ல கூடிய 70 டி அரசு பேருந்து மீதும் இந்த கல் வீச்சு நடைபெற்றுள்ளது. இதில், அரசு பேருந்தின் பின் பக்க கண்ணாடி சேதம் அடைந்துள்ளது.

பேருந்தை உடைத்த கல்லில், சுற்றி இருந்த பேப்பரில் "அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக கண்டனம் எனவும், இதற்கு காரணமான சாதி இந்து தீவிரவாதிகளை கைது செய்ய வேண்டும் எனவும், சிலைகளை உடைக்கலம் ஆனால், சித்தாந்தங்களை சிதைக்க முடியாது," எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.
வேதாரண்யத்தில் நடந்த சம்பவத்தில் கோவை மாநகர் வரை பேருந்துகள் உடைக்கப்பட்டு பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.