கோத்தகிரி அருகே குதிரை பந்தயம் மைதானத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

நீலகிரி : கோத்தகிரி அருகே கடைக்கம்பட்டி கிராமத்தில் குதிரை பந்தயம் மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே கடைக்கம்பட்டி கிராமத்தில் குதிரை பந்தயம் மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது உதகையில் அமைந்துள்ள குதிரைப் பந்தய மைதானம் மாவட்ட நிர்வாகத்திற்கு சுமார் ரூ. 640 கோடி வரி பாக்கி வைத்துள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, குதிரைப்பந்தய மைதானத்தை இடமாற்றம் செய்யக்கோரி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கோத்தகிரி அருகே கடைக்கம்பட்டி கிராமத்தில் படுகர்களின் குலதெய்வமான கோயில், பள்ளி, விளையாட்டு மைதானம், சுடுகாடு உள்ளிட்டவற்றை. 



பகுதிகளை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து இந்த இடத்திற்கு குதிரை பந்தய மைதானம் கொண்டுவர உள்ளதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுமக்கள் கூறுகையில் நீண்ட காலமாக மக்கள் இவ்விடத்தில் இருந்து வருகிறோம் தற்போது மாவட்ட நிர்வாகம் கலாச்சார சீரழிவு சூதாட்டத்தை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பொழுதுபோக்கிற்காக குதிரைப்பந்தயம் கொண்டுவரப்பட்ட தற்போது மாவட்ட நிர்வாகம் இதை ஊக்குவிக்கக் கூடாது .இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் நீலகிரி மாவட்டத்தில் குதிரைப்பந்தயம் நடக்கக்கூடாது மாற்று இடம் எந்த இடம் கொடுக்கக் கூடாது .என தொடர் போராட்டம் நடத்துவோம் ரேஷன், கார்டு ,ஆதார் கார்டு ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...