கோவை கேட்டரி கிளப் சார்பில் பூனை கண்காட்சி : பல்வேறு இனங்களைச் சேர்ந்த பூனைகள் பங்கேற்பு

கோவை : கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள ரோட்டரி கிளப் டெக்ஸ்சிட்டி ஹாலில் பூனை கண்காட்சி நடைபெற்றது.


கோவை : கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள ரோட்டரி கிளப் டெக்ஸ்சிட்டி ஹாலில் பூனை கண்காட்சி நடைபெற்றது. 



கோவை கேட்டரி கிளப் சார்பில் இப்பூனை கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், பெர்சியன் லாங் பூனைகள், பெர்சியன் சாட் பூனைகள், ஹிமாலயன் பூனைகள், பெங்கால் பூனைகள், சியாமிஸ் பூனைகள், சைபீரியன், ரஷ்யன் ப்ளூ, நாட்டு பூனை வகைகளைச் சேர்ந்த 25 பூனைகள் பங்கேற்றன. பூனைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பூனைகள் பற்றி பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும், பூனை குட்டிகள், பூனைகளை எப்படி பராமரிப்பது, பூனைகளை பெருக்குவது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.



பூனை வளர்ப்பது குறித்து பல்வேறு தகவல்களை அறிய முடிந்ததாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக கூறிய பார்வையாளர்கள், ஒரே இடத்தில் பல விதமான வித்தியாசமான பூனைகளை பார்க்க முடிந்ததாக தெரிவித்தனர். பூனைகள் மற்றும் பூனை வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பூனைகளுக்கு இலவசமாக வெறி நாய்க்கடி தடுப்பூசி மற்றும் குடல்புழு நீக்கமும் செய்தனர். விதவிதமான பூனைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...