இக்கரைபூலுவாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா

கோவை : கோவை மாவட்டம் இக்கரைபூலுவாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா இன்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டம் இக்கரைபூலுவாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா இன்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது. 



இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, கறவை மாடுகள் வாங்க மத்திய கால கடனாக 29 பயனாளிகளுக்கு ரூ. 14.40 லட்சம் மதிப்பிலும், 7 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி கடனுதவியாக தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 7 லட்சமும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் செய்ய தலா ரூ. 50,000 கடனுதவியாக ரூ. 1 லட்சமும், விவசாய கூட்டுப்பொறுப்பு குழு மூலம் 10 மழைவாழ் மக்களுக்கு ரூ. 1.96 லட்சமும் என மொத்தம் 125 பயனாளிகளுக்கு ரூ. 24.36 லட்சத்திற்கான காசோலையினை அவர் வழங்கினார்.

பின்னர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு குறித்த நேரத்தில், குறைந்த வட்டி விகிதத்தில் போதுமான கடன் கிடைக்க வழிவகை செய்ய கடந்த 2018-19-ம் ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பாக 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்ற இலக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கினையும் விஞ்சி 11 ஆயிரத்து 449 கோடி ரூபாய் கடன், வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நடப்பாண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பின் மூலம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 8 ஆண்டுகளில் இதுவரையில் 52 ஆயிரம் கோடி மதிப்பில் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இக்கடனுதவிகளை பெறும் பல்வேறு தாய்மார்கள், பாக்கு மட்டை தயாரித்தல், சிறு சிறு தொழில் நிறுவனங்கள் மளிகை கடைகள் டைலரிங் உள்ளிட்ட சுயதொழில்களை பெண்கள் மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். சுய உதவிக் குழு இயக்கத்தினை வலுப்படுத்திடும் பொருட்டு, முக்கியத் திட்டப் பங்காளர்களாக செயல்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக செயல்படும் குழுக்களை மாநில அளவில் தேர்வு செய்து பல விருதுகள் வழங்கப்படுகின்றன. அனைத்து உறுப்பினர்களையும் எழுத்தறிவு பெற்றவர்களாக உருவாக்கும் 30 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 50,000 பரிசுடன் கூடிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக அநீதிகளுக்கு எதிராக அசாதாரணமான துணிவுடன் போராடும், சுய உதவிக் குழுக்களை கௌரவிக்கும் வகையில் 5 சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

அதுபோலவே, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்குவதில் சிறப்பாக செயல்படும் வங்கியாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில், மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வங்கி மற்றும் வங்கி கிளைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. சிறப்பாக செயல்படும் 10 சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மாநில அளவிலான விருதுகள் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் சிறந்த மூன்று சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ. 25,000 வீதம் விருதுகள் வழங்கப்படுகிறது. சிறப்பாக செயல்படும் 5 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம், மாநில அளவிலான விருதுகள் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் சிறந்த ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு தலா ரூ. 1 லட்சம் விருதுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம், ஆரோக்கியமான போட்டிகள் நிலவி சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இத்திட்டங்கள் அனைத்தும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று பெண்கள் சுயசார்பு அடைய வேண்டும் என்ற நோக்கில் அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டங்களைப் பெரும் பயனாளிகள் அனைவரும் நல்ல சிறப்பான முறையில் செயல்படுத்தி தங்கள் வாழ்வில் வளம் காண வேண்டுமாய் வாழ்த்துகிறேன், என்று கூறினார்.



தொடர்ந்து, அவர் தேவராயபுரம்,வெள்ளருக்கம் பாளையத்தில் உள்ள குட்டை தூர்வாரும் பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மகளிர் திட்ட மேலாளர் செல்வராஜூ, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...