செல்வபுரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 5.71 கோடி மதிப்பிலான மக்கும் குப்பைகளை சேகரிக்கும் இலகுரக வாகனங்கள் அறிமுகம்

கோவை : செல்வபுரத்தில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளுக்கு வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பைகளை சேகரிப்பதற்காக ரூ. 5 கோடியே 71 லட்சம் மதிப்பிலான 102 இலகுரக வாகனங்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை : செல்வபுரத்தில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளுக்கு வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பைகளை சேகரிப்பதற்காக ரூ. 5 கோடியே 71 லட்சம் மதிப்பிலான 102 இலகுரக வாகனங்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கோவை மாநகராட்சி, சிறுவாணி பிரதான சாலையில் தெலுங்குபாளையம் பிரிவு முதல் செல்வபுரம் வரை மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 1.69 கோடி மதிப்பில் நீர்கொணரும் வார்பிரும்பு பிரதான குழாய் பதிக்கும் பணிக்கும், தெற்கு மண்டலம், 78-வது வார்டில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 45 லட்சம் மதிப்பில் செல்வபுரம் மாநகராட்சி (வடக்கு) ஆரம்ப பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கலையரங்கம் அமைக்கும் பணிக்கும் பூமி பூஜையினை மாநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.



பின்னர், கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 78-வது வார்டு தேவேந்திர வீதி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கும், 77-வது வார்டு அருள்கார்டன் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 30 இலட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கும், 79-வது வார்டு சொக்கம்புதூர் சாலை பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.11 இலட்சம் மதிப்பில் மழைநீர் வடிகாலுக்கு பராமரிப்பு மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கும் ஆகமொத்தம் ரூ.2 கோடியே 65 இலட்சம் மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளர்

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...