தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக விசாரணைக்காக கோவை எஸ் ஐ டி போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட மூவரும் விடுவிப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பான எச்சரிக்கை விடுத்ததையடுத்து, கோவையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 3 பேர், 24 மணி நேர ரகசிய விசாரணைக்குப் பிறகு நிபந்தனையுடன் போலீசாரால் விடுவிக்கப்பட்டனர்.


கோவை : கோவை மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பான எச்சரிக்கை விடுத்ததையடுத்து, கோவையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 3 பேர், 24 மணி நேர ரகசிய விசாரணைக்குப் பிறகு நிபந்தனையுடன் போலீசாரால் விடுவிக்கப்பட்டனர்.

திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரைச் சேர்ந்தவர் அப்துல் காதர் ரகீம். இவர் தனது கார்மெண்ட் பணி நிமித்தமாக அடிக்கடி பஹ்ரைன் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பஹ்ரைனில் இருந்து தனது தோழியுடன் கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பஹ்ரைனிலிருந்து வந்த சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த பெண்ணை போலீசார் திடீரென கைது செய்தனர். இதையடுத்து, அப்துல் ரஹீம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் 2.30 மணியளவில் கொச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் தீவிரவாத அமைப்புடன் எனக்கு தொடர்பில்லை என நீதிபதியிடம் சொல்லப்போவதாக தனியார் தொலைக்காட்சிக்கு தகவலை கொடுத்துவிட்டு நீதிபதியை பார்ப்பதற்காக அப்துல் காதர் ரகீம் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த கேரளா காவல்துறையினர் அப்துல் காதர் ரகீமை அதிரடியாக கைது செய்தனர். 

மேலும், இவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் தீவிரவாத ஊடுருவலுக்கு உதவிகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவர் கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என கூறப்படுகிறது. இதற்கிடையே, அப்துல் காதர் ரஹீமிடம் அலைபேசியில் பேசியதாக சென்னை, கோவையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவரிடம் நேற்று காலை முதல் எஸ்.ஐ.டி. பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். கோவை புறநகர பகுதியான காருண்யா நகர் காவல் நிலையத்தில் வைத்து கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று காலை முதல் இரவு வரை காருண்யா நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, பின்னர் அவர்கள் மூவரும் பலத்த பாதுகாப்புடன் பி.ஆர்.எஸ். மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இப்படியிருக்க விசாரணைகள் முடிந்த நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் மூன்று பேரும் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டனர். அதேபோல, காவல்துறை சார்பில் எப்பொழுதும் வேண்டுமானாலும் இவர்கள் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...