நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி விருதினை வழங்கினார்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலையை ஏற்படுத்த போஷன் அபியான் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பொது மென்பொருள் செயல்பாடு தகவல் தொடர்புதொழில் நுட்பம், ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிராக சமுதாய அணியை திரட்டல் போன்றவற்றில் ஏற்கனவே பயிற்சி அழைக்கப்பட்டு இருந்தது. போஷன் அபியான் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், 2018 - 2019-ம் ஆண்டில் இத்திட்டதை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகம் பல்வேறு விருதுகளுக்கு தேர்வு பெற்றது.
இதைத் தொடர்ந்து, டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி விருதுகளை வழங்கினார். அந்த விருதுகளை தமிழக அரசு சார்பில் சமூக நலத்துறை அமைசச்சர் டாக்டர். சரோஜா, சமூக நலத்துறை செயலாளர் மதுமதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் கவிதாரா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த விருதுகளுடன் ரூபாய் 3 கோடியே 80 இலட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.