கோவை : இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ. 5,000 உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஹூசூர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் அக்கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார் கூறியதாவது :- லோக் அதாலத் மற்றும் சமரச தீர்வு மைய வழக்குகளில் வழக்கறிஞர்கள் கலந்து கொள்வது இல்லை. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வரும் 31-ம் தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். நீதியரசர்கள் வி.என். பிரகாஷ் மற்றும் வைத்தியநாதன் முன்பு வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை பட்டியலிட வேண்டாம். செக் மோசடி வழக்குகளில் 20 சதவீதம் செலுத்த ஜாமீன்தாரர் கோருவது நிறுத்தி வைக்கப்பட வேண்டும். சுங்க சாவடியில் வழக்கறிஞர்களுக்கு கட்டண வசூலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கபட்டு உள்ளது.

மேலும், பிறப்பு, இறப்பு மற்றும் விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட விஷயங்களை பார் கவுன்சில் தான் சொந்த பொறுப்பில் எடுத்துக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழமை நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும். நீதித்துறையில் இருந்து வரும் சுற்றறிக்கையை தலைமை நீதியரசருக்கு தெரியாமல் வருகிறது என்ற ஒரு கருத்து இருப்பதால், இந்த சுற்றறிக்கையை பற்றி தலைமை நீதியரசரின் பார்வைக்கு கொண்டு வருவது என செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் தோறும் 5000 ரூபாய் உதவி தொகை வழங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றபட்டது, எனத் தெரிவித்தார். இந்த செயற்குழுவில் செயலாளர் சலாவுதீன், பொருளாளர் மகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.