கோவை : நாசவேலையில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியதாக வெளியான எச்சரிக்கையைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் கோவை காருண்யா காவல்நிலையத்தில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாத ஊடுருவல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நாசவேலைகளில் ஈடுபட பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவையில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலையடுத்து, தற்போது கோவை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காருண்யா காவல்நிலையத்தில் 3 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் மாநகர காவல்துறையினர், மாவட்ட காவல்துறையினர், எஸ்.ஐ.டி. பிரிவினர் என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்கள் குறித்த விசாரணை தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. உறுதியான தகவல்களை காவல்துறை வட்டாரத்தில் தற்போது வரை தர மறுத்து வருகின்றனர்.