நீலகிரி : தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டியுள்ள தமிழக - கர்நாடகா மற்றும் கேரள எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் அதிவிரைவு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் இருந்து தமிழக பகுதிக்கு வரும் கக்கா நல்லா சோதனைச்சாவடி, கேரளாவில் இருந்து தமிழக பகுதிகளுக்குள் வரும் நாடுகாணி, சேரம்பாடி, தாளூர், அம்பலமூலா, பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நேற்று இரவு முதல் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் அதிவிரைவு படை போலீசார் மற்றும் கூடலூர் பகுதிகளில் மாவோயிஸ்ட் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நக்சல் தடுப்பு போலீசார் உள்ளிட்டோரையும் தீவிரவாதிகள் ஊடுருவல் கண்காணிப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.