Breaking : தீவிரவாதிகள் ஊடுருவியதாக நடத்தப்பட்ட சோதனையில் கோவையில் இருவர் கைது

கோவை : நாசவேலையில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியதாக வெளியான எச்சரிக்கையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை : நாசவேலையில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியதாக வெளியான எச்சரிக்கையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிரவாத ஊடுருவல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சீர்குலைக்கும் வகையில், நாசவேலைகளில் ஈடுபட பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோவையில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலையடுத்து, 2 பேரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 2 பேரில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் கோவையைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சரியாக எந்த இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இந்த தீவிரவாதிகள் விவகாரத்தில் தகவல்கள் ஏதும் ஊடகங்கள் வாயிலாக வெளியாகாமல் இருக்க போலீசார் ரகசியம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...