நீலகிரி : ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதால் 23 பேர் உயிர் வாழ முடியும் என உதகையில் நடைபெற்ற உடல், உறுப்பு தானம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

உதகையில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் உடல், உறுப்பு தானம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில், கோவை, சென்னை, சேலம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மேலும், உடல் உறுப்பு தானம் செய்யப் பதிவு செய்துள்ள 420 பேரும், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். இதில், உடல் உறுப்பு தானத்தின் பயன்கள் மற்றும் அவசியம் குறித்து நிபுணர்கள் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக, ஒரு மனிதன் தனது உறுப்புகளை தானம் செய்தால் 23 பேர் உயிர் வாழ முடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதில் தமிழகத்தில் மிக மிக குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, தமிழகத்தில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், 80 சதவிகித பேர் உடல் உறுப்பு பாதிப்பு காரணமாக இறப்பதாக தகவல் வெளியிடப்பட்டது.