கோவை மாவட்ட பாதுகாப்பு பணிகளை சாதகமாகப் பயன்படுத்திய சந்தன மரக் கடத்தல் கும்பல் : பணியாளரை கத்தி முனையில் மிரட்டி சந்தன மரம் வெட்டி கடத்தல்

கோவை : கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாதுகாப்பு பணிகளில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் வீட்டு பணியாளரை கத்தி முனையில் வைத்து சந்தன மரங்களை வெட்டி கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாதுகாப்பு பணிகளில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் வீட்டு பணியாளரை கத்தி முனையில் வைத்து சந்தன மரங்களை வெட்டி கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே சந்தன மரக் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த சந்தன மர கடத்தல்காரர்களை கண்காணிக்க போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டும் இவர்களின் கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.காட்டூர், சாய்பாபா கோவில், பந்தய சாலை, குனியமுத்தூர், ஆர்.எஸ். புரம் ஆகிய காவல் எல்லை என தொடர்ச்சியாக சந்தன மர கடத்தல்காரர்களின் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவங்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவலையடுத்து கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல் எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும், கமாண்டோ போலீசாரும் இணைந்து இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் என அனைத்தும் வாகனங்களையும் தணிக்கைகள் செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் முழுவதுமே காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது, ஆர்.எஸ். புரம் பகுதியில் நடைபெற்றுள்ள சந்தன மர கடத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ். புரம் பொன்னுரங்கம் சாலையில் வசித்து வரும் ராஜேந்திரனின் மனைவி நந்தினி தேவி (50). இவர் மாநகராட்சியில் மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்து வருகிறார். 



இந்நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் நந்தினி தேவியின் வீட்டுப் பணியாளரை கத்தி முனையில் மிரட்டி 10 சென்டி மீட்டர் சுற்றளவு கொண்ட சந்தன மரத்தை வெட்டி சென்று தப்பி ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆர்எஸ் புரம் போலீசார் குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...