கோவை : சூலூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட் டாக்ஸி ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு, காரை கடத்தி சென்ற சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் இடையன் வலசு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் கோவையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை மதுரை செல்வதற்காக 2 பேர் வசந்தகுமாரை அணுகி உள்ளனர். பின்னர், சிங்காநல்லூரில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த போது சூலூர் அருகே ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வேண்டும் எனக் கூறி காரை விட்டு ஒருவர் இறங்கினார். இதையடுத்து, பின்னால் அமர்ந்திருந்த மற்றொருவர் திடீரென ஓட்டுநர் வசந்தகுமாரை கத்தியால் குத்தி காரில் இருந்து கீழே தள்ளிவிட்ட பிறகு இருவரும் காரை ஓட்டிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் அருகிலிருந்த பொதுமக்கள் சூலூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து, கோவை மாவட்ட எல்லை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, காரை ஓட்டிக்கொண்டு வந்த இருவரையும் பிடிக்க முயன்றபோது, திருமுருகன் என்பவர் மட்டுமே கைது செய்யப்பட்டார். மற்றொரு நபரான கொங்குசாமி அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் அந்தமான் நிக்கோபார் தீவுகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, தப்பியோடிய குற்றவாளியை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில், துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையிலான ஆய்வாளர் தங்கராஜ், உதவி ஆய்வாளர் பாண்டிராஜன் அடங்கிய குழுவினர் நேற்று சூலூர் அருகே கொங்கு சாமியை கைது செய்தனர். மேலும், அவரை கைது செய்ய முற்படும் போது தப்பிச் செல்ல முயன்றதில் கீழே விழுந்து வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.