டெல்லி : முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலாமானார். அவருக்கு வயது 66.

கடந்த பா.ஜ.க. ஆட்சியின் நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி, கடந்த 9-ந் தேதி மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
66 வயதான இவர், 2014 முதல் 2019 வரையிலான மோடி அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக இருந்துள்ளார். உடல்நிலையை காரணம் காட்டி, இந்த முறை அமைச்சரவையில் தனக்கு இடம் வேண்டாம் என பிரதமர் மோடிக்கு அருண் ஜேட்லி கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, அவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மேலும், அவர் பா.ஜ.க.வின் மாநிலங்களவை குழு தலைவராகவும் பணியாற்றியுள்ளார். வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சட்ட அமைச்சராகவும் அருண் ஜேட்லி பணியாற்றியுள்ளார். 2018-ம் ஆண்டு மே மாதம் அருண் ஜேட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அருண் ஜேட்லி மத்திய நிதி அமைச்சராக இருந்த போது தான் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுஷ்ராஜின் மறைவைத் தொடர்ந்து, பா.ஜ.க.வின் மற்றொரு முக்கியத் தலைவரான அருண் ஜேட்லியின் மறைவு பா.ஜ.க.வினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.