கோவையில் பல குற்றங்களில் சம்மந்தப்பட்ட ரவுடி போக்ஸோ சட்டத்தின்கீழ் கைதின் போது குழிக்குள் விழுந்து கால் முறிந்தது

கோவை : கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, 16 வயது சிறுமியை காதல் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் உறவு வைத்த சம்பவத்தில் ராமநாதபுரம் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


கோவை : கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, 16 வயது சிறுமியை காதல் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் உறவு வைத்த சம்பவத்தில் ராமநாதபுரம் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கோவையில் கடந்த சில வருடங்களாகவே கொலை சம்பவங்கள், கொலை முயற்சி சம்பவங்கள், கஞ்சா விற்பனை ஆகியவை அதிகரித்து வருகிறது. அதேபோல, கஞ்சா மற்றும் மாத்திரை போதை போன்ற போதைகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது. இந்த குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணனின் உத்தரவின் பேரில், தொடர்ந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை புலியகுளம் ஏரிமேடு பகுதியைச் சேர்ந்த ஜோஸ் என்கிற ஜோஷ்வா (28) தொடர்ந்து பல்வேறு கொலை, கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு காதல் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து, சிறுமி மாயமானது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில், சிறுமியை மீட்க ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லதா மற்றும் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் ஜோஸ் என்கிற ஜோஸ்வாவை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில், நேற்று மதியம் ஜோஸ்வாவை போலீசார் கைது செய்தனர். 



இப்படியிருக்க போலீசார் ஜோஸ்வாவை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லும்போது, எதிர்பாராத விதமாக சாலையில் தோண்டப்பட்டிருந்த குழிக்குள் தவறி விழுந்து, அவருக்கு கால் முறிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜோஸ்வா கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக கிழக்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...